Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறைகிறதா? உண்மை என்ன?

சென்னை:

டார்க் சாக்லேட்டை பெண்கள் அதிகம் பேர் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அந்த சாக்லேட்டில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பொதுவாகவே சாக்லேட் சாப்பிடுவது பற்களுக்குக் கேடு, உடலுக்கு ஒவ்வாதது என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இனிப்புச் சுவை குறைவாகவும், கொக்கோ அளவை அதிகமாகவும் கொண்ட ‘டார்க் சாக்லேட்’ சாப்பிடுவது உடலுக்குத் தீங்கல்ல என்கிறார்கள் நவீன ஊட்டச்சத்து நிபுணர்கள்.
டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது என்பதால் அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. லஞ்ச் பாக்ஸ் அளவில் தினமும் 30 முதல் 60 கிராம் (ஒன்று அல்லது இரண்டு சிறிய துண்டுகள்) மட்டுமே சாப்பிட வேண்டும். நீங்கள் வாங்கும் டார்க் சாக்லேட்டின் பாக்கெட்டில் 70% அல்லது அதற்கும் அதிகமான கொக்கோ (70% ) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதி செய்து வாங்குவதே முழுமையான பலனைத் தரும். மேலும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் அடிவயிற்று வலி குறைவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியாக சான்று இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இதை பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சாப்பிடுகிறார்கள். இனி சாக்லேட் சாப்பிடும்போது குற்ற உணர்ச்சி தேவையில்லை; அது டார்க் சாக்லேட்டாக இருந்தால் தாராளமாகச் சுவையுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!