ஒய்விற்காக குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்கும் இன்றைய பெண்கள். ஈரோடு மகப்பேறு மருத்துவர் சங்கீதா ஆதங்கம்.......
இதுதொடர்பாக தமிழக செய்திக்கு அவர் அளித்த பிரத்யோக பேட்டியில் கூறும்போது….
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகமிக அவசியமானது.ஆனால்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இன்றைய அளவில் குறைந்து வருகிறது.முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கமும் குறைந்து வருகிறது.இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
பெரும்பாலான இளம்பெண்களின் பெற்றோரே தாய்பால் கொடுப்பதற்கு தடையாக உள்ளனர்.தங்களது மகள் இரவில் தூக்கம் கெட கூடாது.ஓய்வு எடுக்க வேண்டும் என நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து நாங்களும் வலியுறித்தி அறிவுரை வழங்குகிறோம்.மேலும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.