சமூக நீதி கல்லுாரி மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.
ஈரோடு மாவட்டம் சித்தோடு, குமிலம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி கல்லுாரி மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சமூக நீதி கல்லுாரி மாணவியர் விடுதியில், அட்டவணையில் உள்ள படி மாணவியர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா, உணவுப்பொருள்களின் தரம், மின்விளக்கு, சுகாதாரம், சமையலறை பராமரிப்பு, படிப்பறைகள், கண்காணிப்பு கேமரா, விளையாட்டு உபகரணங்கள், முதலுதவி பெட்டி, புகார் பெட்டி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சமூக நீதி விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களிடம் கூடுதல் வசதி குறித்தும் கேட்டறிந்தார். மேலும், விடுதி வளாகத்தை எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் காலவதியான மருந்துகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, சரியான மருந்துகளை வைத்திருக்க வேண்டும் எனவும், புகார் பெட்டியில் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கவிதா, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 38 ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் திருமேனி விநியோகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.