Tamizhagaseithi

  RNI:1359610/TNTAM24070

     Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

RNI:1359610/TNTAM24070

Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறை மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறை மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு (FATIA) இணைந்து நடத்திய ZED (Zero Defect Zero Effect) விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் Energy Audit (ஆற்றல் தணிக்கை) உதவி முகாம், FATIA-வின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் FATIA -வின் தொழில் வளர்ச்சிக் குழுத் தலைவர் M. R. வெங்கடாசலம் வரவேட்புரை நல்கினார்.
தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையுரை ஆற்றி விழாவை துவக்கி வைத்தார். பொருளாளர் R. முருகானந்தம் முன்னிலை வகித்தார்கள் IRD (Indian Industries and Rural Development) முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட தொழில் மையத்தின் (DIC) பொது மேலாளர் G. திருமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். Energy Audit செலவை குறைக்கும் அறிவியல் அணுகுமுறை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக Energy Audit குறித்து தொழில் முனைவோருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. 5. A, M.E., Lead Auditor & Project Head, Vahine Technologies Pvt. Ltd., Managing Partner, அவர்கள் மற்றும் திரு 8. கார்த்திகேயன், ZED Assessor Chennai-indian Industries and Rural Development கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ENERGY AUDIT SUPPORT
ஒரு தொழிற்சாலையில் மின்சாரம் மற்றும் பிற ஆற்றல் வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெறுமனே கணக்கிடுவது மட்டுமல்லாமல், எந்தப் பகுதியில் அதிக ஆற்றல் செல்வாகிறது எங்கு ஆற்றல் வீணாகிறது. எந்த இயந்திரம் அல்லது செயல்முறையில் திறன் குறைவு உள்ளது. எங்கு சேமிப்பு வாய்ப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே Energy Audit-ன் முக்கிய நோக்கமாகும் இதற்காக தொழிற்சாலையின் மின்சாரக் கட்டணப் பட்டியல்கள். மின் பயன்பாட்டு அளவுகள், உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பல்வேறு பயன்பாட்டு பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மோட்டார்கள், பம்புகள், கம்பிரஸர்கள், பாய்லர்கள், குளிரூட்டும் அமைப்புகள், விளக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆற்றல் பயன்பாட்டு அமைப்புகளின் செயல்திறனும் பரிசோதிக்கப்படுகிறது.
குறிப்பாக, மோட்டார்கள் தேவையற்ற நேரங்களில் இயங்குவது. குறைந்த திறனில் செயல்படும் உபகரணங்கள், காற்று கசிவு, அதிக மின் நுகர்வு, தேவையற்ற வெப்ப இழப்பு குறைந்த திறன் கொண்ட விளக்குகள் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத இயந்திரங்கள் போன்ற காரணங்களால் ஏற்படும் ஆற்றல் வினாவதை கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் மின்சாரச் செலவை குறைக்க முடியும் என விளக்கப்பட்டது
Energy Audit மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள் Energy Audit மூலம் நிறுவனங்கள், மின்சாரச் செலவைக் குறைக்கவும், ஆற்றல் வினாவதைத் தடுக்கவும் இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், பராமரிப்பு செலவைக் கட்டுப்படுத்தவும், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செலவை குறைக்கவும். உற்பத்தித் திறனை மேம்படுத்தவும். சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் முடியும் என தொழில் முனைவோருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், Energy Audit-ல் கண்டறியப்படும் ஒவ்வொரு சேமிப்பு வாய்ப்பையும் முதலீடு,
எதிர்பார்க்கப்படும் ஆற்றல் சேமிப்பு செலவு குறைப்பு மற்றும் முதலீடு திரும்பும் காலம் intஆகிய அடிப்படைகளில் மதிப்பீடு செய்துட தொழில் நிறுவனத்திற்கு ஏற்ற நடைமுறைத் தீர்வுகளைத் தேர்வு செய்வது முக்கியம் என விலக்கப்பட்டது.
 MSME ஆற்றல் திறன் முயற்சிகளிலும் amenment, eney unpruமற்றும் ஆகியவை முக்கிய பகுதிகளாக இடம்பெறுகின்றனஎன்றார்.
200 Zero Defect Zero Metசான்றிதழின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்தும் விரிவாக விளக்கினார் தரக்குறைபாடுகளை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்புடன் உற்பத்தி செய்வதுடன் வினாக்கத்தைக் குறைத்து உற்பத்தித் திறன், தரம் மற்றும் தொழில் போட்டித்திறனை மேம்படுத்துவது 200அணுகுமுறையின் முக்கிய நோக்கங்களாகும் நிகழ்ச்சியில் அரசு மானியங்கள் MSME நலத்திட்டங்கள், 2013 மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான ஆற்றல் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்தும் தொழில் முனைவோருக்கு எடுத்துரைக்கப்பட்டது. 220 மற்றும் or தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினர் உள்ளிட்ட ATA நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரளான MSME தொழில் முனைவோர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நொழில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், ஆற்றலைச் சேமிப்பது என்பது மின்சாரத்தை மட்டும் சேமிப்பது அல்ல; அது உற்பத்திச் செலவைக் குறைத்து, நிறுவனத்தின் போட்டித்திறனையும் லாபத்தையும் மேம்படுத்தும் முதலீடு என்ற கருத்தை தொழில் முனைவோர் மத்தியில் வலியுறுத்தி, தங்களது நிறுவனங்களில் Energy Aud மேற்கொண்டு ஆற்றல் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது இறுதியாக பொதுச்செயலாளர் P.ரவிச்சந்திரன் நன்றியுரை நல்கினார்.