Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

ஈரோட்டில் உள்ள மருந்து கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகள் தவறாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மருந்தகங்களில் போலீசார் அதிரடியாக தீவிர சோதனை நடத்தினர்...

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வது அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது அதன் விற்பனையானது குறைந்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வீரப்பன்சத்திரம் , பெரிய வலசு, மாணிக்கம்பாளையம், சூளை, நசியனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகளில் நகர காவல் துறை கண்காணிப்பாளர் முத்துக்குமார், ஆய்வாளர் சரவணன் தலைமையிலானநடத்தினர்.அப்போது வடக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மருந்தக ஆய்வாளர் உள்ளிட்டோர் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது மருந்தங்களின் மூலம் போதைக்காக பயன்படுத்த கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து மாத்திரைகள் குறித்தும் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மருந்தகங்கள் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதி ஆகியோரிடமும் கேட்டறிந்தனர்.அப்போது போதைக்காக வலி மாத்திரைகளை விற்பனை செய்வோர் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்ட போலீசார் வலி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்..