Tamizhagaseithi

  RNI:1359610/TNTAM24070

     Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

RNI:1359610/TNTAM24070

Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

ஜான்பாண்டியன் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஈரோடு எஸ்.பியிடம் மனு

ஈரோடு:​தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த சமூக வளைதள கணக்கை முடக்கக் கோரியும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு மாவட்ட செயலாளர் மயில்துரையன் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
​கடந்த 22.09.2026 அன்று “www.facebook.com/Devendrakulavelalar” என்ற பேஸ்புக் பக்கத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை தவறாக சித்தரித்து கார்ட்டூன் படமும், கீழ்த்தரமான பதிவுகளும் வெளியிடப்பட்டிருந்தன
​எங்களது தலைவரை சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்ற “தேவேந்திர குல வேளாளர்” என்ற பேஸ்புக் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும்.
மேலும், யூடியூப் (YouTuber) உள்ளிட்ட ஊடகங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்களைக் கைது செய்து, அவர்கள் மீது சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார் மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன், 30 ஆவது வார்டு செயலாளர் கோவிந்தன், சேதுபதி, மோகன், ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.