வீட்டில் நெகடிவ் சக்தி அதிகமாக இருக்கா?... பாசிட்டிவ் சக்தியை அதிகரிக்கும் பத்து செயல்கள்
உங்கள் வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு நேர்மறை ஆற்றலை விரட்டி விடும். சிலர் எப்போதும் வீட்டை இருட்டாகவே வைத்திருப்பார்கள். அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். வெளிச்சம் எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.
வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும். எனவே ரிப்பேரான மின்சாதனங்கள் தேவையற்ற பொருட்களை உடனே குப்பையில் வீசி விடுங்கள்.
குப்பைகள் அற்ற வீடு
தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும் கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்.கல் உப்பு நீரில் கரைத்து குளித்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம். வீட்டின் தரையை கல் உப்பு கலந்த கரைசலால் சுத்தம் செய்யவும். இதனால் எதிர் மறை சக்தியான தீய சக்தி நீங்கும்.சூரிய உதயத்தின் வெளிச்சம் வீட்டினுள் படுவதால் எதிர்மறை சக்திகள் விலகி. சூரிய வெளிச்சம் வழியாக ஊடுருவி வருகின்ற சக்தி நன்மை உண்டாக்கும் நேர்மறை ஆற்றல் வீட்டில் பரவும். காலை நேரத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வையுங்கள்.