Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

செவ்வாய்கிழமை மறந்தும் கூட இந்த காரியங்களை செய்துவிடாதீர்கள்..கஷ்டதை வீடு தேடி அழைத்து விடாதீர்கள்

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட சில காரியங்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் கஷ்டங்களை நாமே வெற்றிலை பாக்கு வைத்தது போல ஆகி விடும்.

மங்களகரமான நாளான செவ்வாய்கிழமை நாளில் சில காரியங்களை மறந்தும் செய்யக்கூடாது. சில காரியங்களை செவ்வாய்கிழமை நாட்களில் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். செவ்வாய்கிழமையன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். இவர் மனிதனின் இரத்தத்திற்கு காரகமானவர், மனிதனுக்கு ஆற்றல், வலிமை, சக்தியை கொடுப்பவராகவும் செவ்வாய் பகவான் திகழ்கிறார். இவரது ஆசி இருந்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.செவ்வாய் பகவானின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் மனிதனுக்கு வீடு, மணை, கார் போன்றவை வாங்கும் யோகம் எளிதாக கிடைத்துவிடும். ஆகவே செவ்வாய் பகவானின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்க வேண்டும். அவரின் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டால் போதும். நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். வீடு,நிலம் வாங்கி செல்வத்திற்கு அதிபதியாக மாறலாம். ஆகவே செவ்வாய்க்கிழமை ஒரு சில பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தால் செவ்வாய் பகவானின் அருள் குறைந்து வறுமை ஏற்படும்.

முருகப்பெருமான் வழிபாடு

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆற்றல், வீரம், வலிமை போன்றவற்றை தரக்கூடியவர் அங்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாய் ஆவார். ஆகவேதான் நவகிரகங்களில் முதன்மையானவராக செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றோம். அவ்வாறு செவ்வாய் கிரகத்திற்கு உரியவராகவும் இருப்பவர் முருகப்பெருமானாகவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுவதற்கு சிறந்த நாளாகவும் அமைகின்றது.

பெரிய அளவில் மங்களகரமான காரியங்கள் செய்வதற்கும், ஆன்மீக வழிபாடு செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற நாளாக அமைகிறது. நாம் வணங்கும் இந்த தெய்வம் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள். இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.