Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?

திருமணமான வீட்டில் உடனடியாக சில விசயங்களை செய்தால் வீட்டில், இழப்புகள் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் காரண காரியம் இன்றி சொல்லி வைத்திருக்க மாட்டர்கள். நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் நம்மை மீள முடியாத துன்பத்தில் தள்ளிவிடும். புதிதாக திருமணம் நடந்த வீட்டில் என்ன விசயங்கள் செய்யலாம் என்ன விசயங்கள் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
புதிதாக திருமணம் நடந்த வீட்டில் ஆறு மாதத்திற்குள் சில விஷேசங்களை செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அந்த சாஸ்திரங்களை மீறி நாம் அந்த விஷேசங்களை செய்தால் குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி மறந்தும் இந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.
அப்படி மீறி செய்து விட்டு கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு சில பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது மேற்கொண்டு படியுங்கள்

புனித தலங்களுக்கு யாத்திரை

பிள்ளைகளுக்கு திருமணம் நடந்த பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் புனித யாத்திரை கிளம்புவார்கள். அப்படி செல்லக்கூடாது. அதுபோல திருமணமான தம்பதியர்கள் ஆறு மாதத்திற்குள், காசி ராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லக்கூடாதாம். அந்த வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களும் இப்படிப்பட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
புதிதாக திருமணம் நடந்த வீட்டில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய, மற்ற குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா நடத்தக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி மொட்டை அடித்து காது குத்தினால் பாதிப்பு அந்த குழந்தைக்குத்தான் ஏற்படுமாம். தீராத உடல் நல பாதிப்பில் சிக்கி துயரப்பட நேரிடுமாம்.
வீட்டைக்கட்டிப்பார்… கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். நாம் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து விட்டு மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடத்தலாம். ஆனால் புதிதாக திருமண நடந்த ஆறு மாதத்திற்குள் புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தி குடி போகக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.