வீட்டிற்குள் சுபிட்சம் வர வேண்டுமா... இந்த விசயங்களை செய்தால் தெய்வம் வீட்டிற்குள் குடியேறும்
பூஜை அறையில் நாம் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்கள் கூட வீட்டில் சுபிட்சமும் தெய்வ அருளும் நிலைத்திருக்க காரணமாக அமையும். தினமும் விளக்கேற்றும் வீடுகளில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
நாம் குடியிருக்கும் வீடு இறை அருள் நிறைந்ததாக இருக்க வேண்டும். தெய்வ அருள் நிறைந்த வீட்டிற்குள் துஷ்ட சக்தி எட்டிக்கூட பார்க்காது. நம்முடைய பூஜை அறையில் நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தெய்வ சக்தியை நம்முடைய வீட்டிற்குள் ஈர்க்கும். தெய்வ அருள் நிறைந்த வீட்டில் செல்வமும் சுபிட்சமும் நிறைந்திருந்திருக்கும் மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்கள் வீட்டிற்குள் தெய்வம் குடியேற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.பூஜை அறையில் நீங்கள் விதவிதமாக எத்தனை விளக்குகளை வைத்திருந்தாலும், அகல் விளக்கிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனவே பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது அகல் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
பூஜை அறையில் தெய்வீக சக்தி பெருக பூஜை செய்யும் பொழுது அங்கு பன்னீர் வைத்திருப்பது நல்லது. அது போல அத்தர், ஜவ்வாது போன்ற வாசனை மிக்க பொருட்கள் தெய்வீக ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கும். பூஜை செய்யும் போது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
நைவேத்தியம் அவசியம்
தண்ணீர் இல்லாமல் பூஜை நிறைவு பெறாது. பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது அவசியம். அதே போல நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை கட்டாயம் வைத்து தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். கல்கண்டு, சர்க்கரை வைத்தாவது பூஜை செய்ய வேண்டும்.
பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள் கண்ணாடி உங்களுடைய பித்ருக்கள் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி வழியே தங்களுடைய முகத்தை பிரதிபலித்து விட்டு செல்வதாக சாஸ்திரம் கூறுகிறது. பித்ருக்கள் மட்டுமல்லாமல் குலதெய்வத்தினுடைய பிம்பமும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும். எனவே கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது வைத்துக் கொள்ளுங்கள்.அது போல் நீங்கள் விதவிதமாக எத்தனை சுவாமி படங்களை வைத்து இருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உங்களுடைய குல தெய்வம் என்னவென்று அறிந்து, அவருக்குரிய படங்களை வைத்து பூஜை செய்வது இன்னும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும். பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்களில் முக்கியமான படம் கோமாதா. பசு மாட்டை வணங்கும் பொழுது நமக்கு மற்ற அத்தனை தேவர்களும், தெய்வங்களும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்யும் பலன்கள் கிடைக்கும். எனவே கோமாதா படத்தை கட்டாயம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஒரு சுபீட்சம் பெருகும்
நம்முடைய பூஜை அறையில் சனிபகவான் உருவ படங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. அதே போல நவகிரங்களின் உருவப்படங்களை வைத்து பூஜை செய்யக்கூடாது. கடவுள் படங்களில் உக்கிரமாகவோ அல்லது சன்னியாசி கோலத்தில் இருந்தால் வீட்டில் வைக்கக் கூடாது. முருகப்பெருமான் சன்னியாசி கோலத்தில் இருந்தால் மற்றும் தலைக்கு மேல் வேல் இருந்தால் அந்த உருவப்படங்களை வீட்டில் வைத்து வழிபட கூடாது. அகோரமாக இருகின்ற காளியம்மன் துர்க்கை மற்றும் சிவனின் ருத்ரதாண்டவ புகைப்படம் போன்றவை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது.