உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட இந்த ஒரு பழம் போதும்... இப்படி செய்து பாருங்கள்
கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
எலுமிச்சை கனியை நல்ல சக்தியை பெறவும், தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலுமிச்சம் பழத்தை கோவிலில் கொடுக்கும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வலுபெற்று இருக்கும். வீட்டில், தொழிற் கூடங்களில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்டவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
எலுமிச்சம் பழத்திற்கு தேவ கனி என்ற பெயர் உண்டு. இதனை தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்துடன் எலுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது.
நம் மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு ஏன் என்று தோன்றுகிறதல்லவா, அது ஏனென்றால் மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு, பலாவில் வியர்வை குற்றம் உண்டு, வாழையில் புள்ளி குற்றம் உண்டு, ஆனால் எலுமிச்சை மட்டும் எந்த குற்றத்திற்கும் உடன்படவில்லை என்று முன்னோர்கள் எலுமிச்சையை தேவகனி என்று பெயரிட்டுள்ளார்கள். நல்ல காரியமாக நாம் யாரையாவது பார்க்கப் போனால் நம்முடன் எலுமிச்சம் பழத்தை கொண்டு போனால் அந்த காரியம் நிச்சயம் வெற்றியடையும்
எலுமிச்சம் கனி மாலை
தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை அணிவித்து வழிபட்டால் நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
எலுமிச்சம் பழத்திற்கு இருக்கும் சக்தி அளப்பரியது. மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சுப காரியதிற்கு செல்லும் போதோ, வெற்றியை நோக்கி செல்லும் போதோ இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னர் இருக்கும் திரிசூலத்தில் சொருகி விட்டு போனால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவுபாடு ஏற்படும், உறவுகளின் இடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது, எனவே எதிர்மறை ஆற்றலை கண்டறிந்து அதை வெளியேற்ற வேண்டும். மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள், கருப்பு நிறத்தில் மாறினால், அதை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.