Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

கடனில் மூழ்காமல் இருக்கனுமா? வெள்ளிக்கிழமை மறந்தும் கூட இந்த வேலையை செய்யாதீர்கள்..அப்புறம் பாருங்க!

கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.

கிக்சன் துடைக்காதீர்கள்

வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.

நகை, பணம் கடனாக தர வேண்டாம்

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது வியாழக்கிழமை அன்றே செய்துவிடவேண்டும். வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.