காரிய வெற்றி தரும் தீபங்கள்...வீட்டில் தீபம் ஏற்றும் போதும் இதை செய்ய மறக்க வேண்டாம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபடலாம்.
தீபங்கள் நமது கர்ம வினையை நீக்குகின்றன. தெய்வங்களை அமைதிபடுத்தக்கூடியவை. தீபங்களை முறையாக ஏற்ற வேண்டியது அவசியம். எந்த தீபங்களை எப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.நம்முடைய வீட்டில் தினம் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும் மாலையில் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் வீட்டில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.
எந்த தீபத்திற்கு என்ன பலன்
ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் வீட்டில் ஏற்றுவதால் கிடைப்பது உண்டு. மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும். காரிய வெற்றிக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாம்