Tamizhagaseithi

  RNI:1359610/TNTAM24070

     Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

RNI:1359610/TNTAM24070

Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

பழனி மலைக்கோயிலில் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை: புதிய கட்டுப்பாடு

பழனிமலைக்கோயிலில் அர்ச்சகர்கள்,காவலாளிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல ஏற்கனவே தடை உள்ளது. மீறி செல்போன் பயன்படுத்தும் பக்தர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், காவலாளிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயில் பாதுகாப்பு மற்றும் பணிகளின் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
பணியாளர்கள் அவசரமாக தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலையில், *ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக சாதாரண பட்டன் போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
விதிகளை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.