பணத்தை ஈர்க்கும் அஞ்சறைப்பெட்டி ரகசியம்... அடுப்பங்கரையில் இதை செய்தால் விரைய செலவு குறையும்
நாம் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல…அந்த பணம் விரைய செலவு ஆகாமல் காப்பாற்ற வேண்டும். பணத்தை ஈர்ப்பதற்கு சில சூட்சுமங்கள் உள்ளன
கையிலே வாங்கினேன்… பையிலே போடல… காசு போன இடம் தெரியலை என்று சிலர் வேதனையோடு பாடுவார்கள். சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும். சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும். பணத்தை ஈர்க்கவும், வீட்டில் செல்வத்தையும் பணத்தையும் தக்கவைக்கவும் சில சூட்சும ரகசியங்கள் உள்ளன. நம் வீட்டு அடுப்பங்கரை அஞ்சறைப்பெட்டியில் உள்ள அந்த பொருட்களே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவை.நம்முடைய வீடு வாசனையாக இருக்க வேண்டும். நறுமணம் கமழும் வீடுகளில் அன்னை லட்சுமி குடியேறுவாள். எனவேதான் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு சாமி கும்பிடுவார்கள் இல்லத்தரசிகள்
அடுப்பங்கங்கரையில் உள்ள நறுமணம் மிகுந்த பொருட்கள் சில உள்ளன. அந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சோதனை முயற்சியாக செய்து பாருங்கள். பணத்தை ஈர்க்கும் சக்தியையும் தக்க வைக்கும் சக்தியையும் கண் கூடாக காண்பீர்கள். வீண் விரைய செலவுகள் தடுக்கப்பட்டு அவை சுப விரைய செலவாக மாறும்.
கல் உப்பு ரகசியம்
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது, அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை உள்ள நேரங்களில் கல் உப்பு வாங்கலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வர பண வரவு அதிகரிக்கும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதால்தான் இன்றைக்கும் பலரது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்லும் போது கல் உப்பு மஞ்சள் வாங்கிச் செல்கின்றனர்.
நாம் அன்றாட சமையலுக்க பயன்படுத்தப்படும் கிராம்பு,ஏலக்காய் போன்றவைகளுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. மஞ்சள் துணியில் சிறிதளவு பச்சைக்கற்பூரம் 3 துண்டுகள், 3 கிராம்பு, 3 ஏலக்காய் சேர்த்து அதை சிறிய முடிச்சாக மஞ்சள் நூலில் கட்டி வைக்கவும். வியாபார ஸ்தலங்களில் கல்லா பெட்டியில் வைக்க வேண்டும். வீட்டில் பணம் வைக்கும் பீரோவில் வைக்கலாம். நகை பெட்டியில் வைக்கலாம் நகை அடகுபோகாமல் வீட்டிலேயே தங்கும்.
நீங்கள் சம்பளம் வாங்கி வந்தவுடன் அந்த பணத்தை எங்கு வைப்பீர்களோ! அந்த இடத்தில் வைக்கலாம்.