Tamizhagaseithi

  RNI:1359610/TNTAM24070

     Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

RNI:1359610/TNTAM24070

Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேரோட்டம் ...... தேரை தோளில் சுமந்த பக்தர்கள்.....

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது,

இக்கோவிலின் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டத்துடன் தொடங்கிய நிலையில், கடந்த புதன்கிழமை புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள வனக்கோவிலுக்கு மகமேறு தேர்தளில் குருநாத சுவாமி மற்றும் பெருமாள் சுவாமி படியமர்த்தப்பட்டும், பல்லாக்கில் காமாட்சி அம்மன் படியமர்த்தப்பட்டும் பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்,


பக்தர்கள் தங்களது தோள் மீது மகமேறு தேர்கள் மற்றும் பல்லாக்கை தோளில் சுமந்து சென்றனர்.

தொடர்ந்து மகா மண்டபத்தில் குருநாதசாமி பெருமாள்சாமி மற்றும் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத நிகழ்வாக குருநாதசாமி, பெருமாள் சாமி மற்றும் காமாட்சி அம்மன் மூலவர் தெய்வங்கள் வேங்கை மரத்தால் செய்யப்பட்டுள்ளது, இந்த வேங்கை மரத்தால் செய்யப்பட்ட சிலைகள் மீது வெள்ளிக் கவசங்கள் பொருத்தப்பட்டு தேரோட்டத்தில் மூலவர் தெய்வங்களை படியமர்த்தி தேரில் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தை மற்றும் கால்நடை சந்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது,