Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

மருதாணியை வீட்டில் வளர்த்தால் இத்தனை நன்மைகளா?..எங்கே எப்படி வளர்க்கலாம் தெரியுமா?

மகாலட்சுமியின் பரிபூரண அருள் பெறுவதற்கு மருதாணி செடியை கட்டாயம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

செக்கச் சிவக்க மருதாணியை கையில் வைத்தாலே மனதில் புது உற்சாகம் குடி கொள்ளும் முகமும் மலர்ச்சியாக இருக்கும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மருதாணியை வைத்தாலும் மகாலட்சுமியின் அம்சம் குடியேறும். அதே போல வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைக்கும் என்பது உண்மை.
அழகிற்காக மட்டுமே இந்த செடி வளர்க்கப்படுவதில்லை. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது.
எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு உண்டு. இதே போல் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொண்டால் பெண்களை எந்த ஒரு துஷ்ட சக்தியும் தாக்காது

மருதாணி செடி

மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த ஒரு செடி மட்டும் வீட்டில் எந்த ஒரு திசையிலும் வைத்து வளர்க்கலாம். தோஷம் இல்லாத மருதாணி செடி மிகவும் மகத்துவமானது.
மருதாணி செடி உடைய இலைகளை வேப்பிலையுடன் சேர்த்து சிறிதளவு வண்டி, வாகனங்களில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு திருஷ்டி தோஷமும் அணுகாது. வீட்டின் கேட்டிலும் மருதாணி மற்றும் வேப்பிலை சேர்த்து சொருகி வைக்கலாம். நேர்மறை அதிர்வலைகள் உருவாகும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

அழகும் ஆரோக்கியமும்

சுபகாரியங்களில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வதற்கும் இதுவே காரணமாகும். வெறும் அழகிற்காக மட்டு மருதாணி இடப்படுவதில்லை. அதில் இருக்கும் அதிர்வலைகள் ஒரு விதமான உற்சாகத்தைக் கொடுக்கும்.

தினமும் மருதாணி இலையை அரைத்து வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் உங்களுடைய கைகளில் பணம் விரயமாகாமல் தங்கும். திருமணம் சுபகாரிய தடை இருக்கும் பெண்களும் இதனை செய்வதால் காரியத்தடை நீங்கி சுபகாரியங்கள் கைகூடும்.