Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

thozhil-content-f1

1991ல் நடந்த மாயாஜாலம்.. தொழில், வளர்ச்சியில் வட இந்தியாவை தென்னிந்தியா முந்தியது எப்படி?

சென்னை:

இந்தியா ஒரு வித்தியாசமான நிலப்பரப்புகள் கொண்ட நாடு, பல்வேறு வகையான கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனம் என எல்லாமே வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்ட நாடு. இங்கு 1991ல் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு தொழில், வளர்ச்சி, செல்வ வளம் என எல்லாவற்றிலும் வட இந்தியாவை தென்னிந்தியா முந்திவிட்டது எப்படி முந்தின என்பதை பார்ப்போம்.
இந்தியா என்பது பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், உணவு முறை, பழக்க வழக்கம் என எல்லாவற்றிலும் வேறுபட்ட முறைகளை கொண்டவர்கள். கடவுள் வழிபாட்டு முறையில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 75 வருடத்தில் வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தியாவில் மிகப்பெரிய செல்வ வளத்துடன், தொழில் வளச்சியில் முன்னேறிய இருந்த மாநிலங்கள் பல, சரிவை சந்தித்துள்ளன. அதேபோல் சில மாநிலங்கள் கடும் வறட்சி மற்றும் பின்தங்கிய நிலையில் இருந்து கல்வி வளர்ச்சி காரணமாக நாட்டின் முக்கியமான பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளன. கடந்த 60 ஆண்டு வளர்ச்சி நிலை குறித்து பிரதமருக்குகான பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி பார்த்தால் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. பிரதமருக்குகான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 1960-61ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.4 சதவீத பங்களிப்பை கொண்டிருந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம், 1990-91 வாக்கில், அதன் பங்களிப்பு 12.6 சதவீதமாகக் குறைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரிந்த பிறகு, அதன் வளர்ச்சி விகிதம் அதைவிடவும் குறைந்துவிட்டது.