கோவையில் உள்ள தொழில்முனைவோருக்கு குட் நியூஸ்.. திட்டத்தை அறிவித்த கலெக்டர்
சென்னை:
பசுமைத் தொழில் முனைவோர்களை பொருளாதார வகையில் ஊக்கப்படுத்தும் வகையில் பசுமை தொழில்முனைவோர் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து தொழிலை வளர்ச்சியடையச் செய்வதற்கான நிதியைப் பெறலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கோவை மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து பசுமை மாவட்டமாக ஆக்கும் வகையில், பசுமை தொழில் முனைவோர் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பசுமை செயல்பாடுகளை உருவாக்கி தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு பொருளாதாரா வகையில் உதவி செய்யும் பொருட்டு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். மிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், பொருளாதார ரீதியாக பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் பொருட்டு “பசுமை தொழில் முனைவோர் திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமை தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தொழில் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.