Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

thozhil-content-d1

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. அரசு தரும் உதவி தெரியுமா? கோவை அதிகாரி குட்நியூஸ்

சென்னை:

கோவையில் பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் 161 பேருக்கு கோடிக்கணக்கில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொழில் தொடங்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. கல்வி தகுதியும் தேவையில்லை. பொதுபிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
பலருக்கு தொழில் தொடங்கி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உரிய சரியான முயற்சிகளை எந்த சூழலிலும் கைவிடாதவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளை காரணம் காட்டாமல் இலக்கு நோக்கி பயணிக்க ரிஸ்க் எடுப்பவர்கள் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகிறார்கள். சரியான முறையில் முயற்சி செய்தால், வட்டியே இல்லாமல் பல லட்சம் கடன் பெற்று வெற்றிகரமாக தொழிலை நடத்தி, திரும்ப கடனை செலுத்தி மேலே வர முடியும். அதற்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மானிய உதவிகளை செய்கிறது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை துவக்குவோர், அதற்காக ஜிஎஸ்டி பதிவு செய்து, தொழிலை வெற்றிகரமாக கொண்டு சென்றால், எளிதாக அரசின் கடன் உதவிகளை பெற்று மேலே வர முடியும். தமிழ்நாட்டில் அப்படி தொழில் வாய்ப்புகளை கண்டுபிடித்து, தொழில்களை அதிகம் உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் உள்ளனர்.

அதில் குறிப்பாக சொல்வது என்றால், கோவை,ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சொல்லலாம். கோவையை பொறுத்தவரை, படித்தவர்கள் உடனேவேலைக்கு செல்வதை விட சொந்த தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கான வழிகாட்டுதல்களும் சரி, வழிகளும் சரி அங்கு கோவையில் அதிகமாகவே உள்ளது. கோவையில் உள்ளவர்கள், தொழில் தொடங்கி முன்னேற மத்திய மாநில அரசுகள் உதவிகள், திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் காண்கிறார்கள்.. அப்படி அடையாளம் கண்டு உழைத்தவர்கள் இன்று மிகப்பெரிய தொழில் அதிபர்களாக உள்ளனர்.