Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

thozhil-content-b1

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானியம்

சென்னை:

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம், தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம்” இவ்வாறு கூறியுள்ளார்.