Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

அசைவம் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத 5 உணவுகள்! மீறினால் ஆபத்து? விழிப்புணர்வு ரிப்போர்ட்!

சென்னை:

ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே போதும், பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகளின் மணம் கமகமக்கத் தொடங்கிவிடும். ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் எனப் பலவகை அசைவ உணவுகளைத் தட்டே உருகும் அளவுக்குக் கட்டியிழுப்பது நம்மவர்களின் வழக்கம்.
ஆனால், அசைவ உணவுகளைச் சாப்பிட்ட உடனே அல்லது அதற்குப் பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள், நம் உடலுக்குள் மிகப்பெரிய ‘பயோ-கெமிக்கல்’ யுத்தத்தையே தொடங்கிவிடும் என்கிறார்கள் உணவுமுறை நிபுணர்கள்.

1. ‘விஷமாக’ மாறும் பால் மற்றும் பால் பொருட்கள்!
அசைவ சாப்பாட்டை முடித்த கையோடு ஒரு கிளாஸ் பால் குடிப்பது அல்லது பால் சார்ந்த இனிப்புகளைச் சாப்பிடுவது பலருக்குப் பழக்கம். ஆயுர்வேதம் மற்றும் நவீன ஊட்டச்சத்து அறிவியல் என இரண்டுமே இதை மிகக் கடுமையான தவறு என்கிறது.

காரணம்: பாலில் உள்ள புரதமும் , அசைவத்தில் உள்ள புரதமும் முற்றிலும் வேறுபட்டவை. இவை இரண்டும் வயிற்றில் ஒன்றாகச் சேரும்போது செரிமான மண்டலம் நிலைகுலைந்து போகும்.

விளைவு: கடுமையான வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை ஏற்படுவதுடன், நீண்ட காலத்தில் ‘விட்டிலிகோ’ எனப்படும் தோலில் வெள்ளைத் திட்டுக்கள் விழும் பாதிப்புகளுக்கு இது வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.

2. தயிர் மற்றும் மோர்
“என்னதான் பிரியாணி சாப்பிட்டாலும் கடைசில ரெண்டு வாய் தயிர் சாதம் சாப்பிட்டாதான் திருப்தியா இருக்கும்” என்பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் உடனே எச்சரிக்கையாக வேண்டும்.

காரணம்: அசைவ உணவுகள் பொதுவாக உடலுக்கு வெப்பத்தைத் தரக்கூடியவை. ஆனால் தயிர் உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

விளைவு: இந்த எதிர் எதிர் குணங்கள் கொண்ட உணவுகள் ஒரே நேரத்தில் செரிமானமாக முயலும் போது, உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இது வயிற்றுப்போக்கு மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

3. டீ மற்றும் காபி
அசைவம் சாப்பிட்ட கணத்தோடு, வயிறு பாரமாக இருக்கிறது என்று சொல்லி சூடாக ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பவர்கள் அநேகம். இது முற்றிலும் தவறான புரிதல்.

காரணம்: தேயிலையில் ‘டேனின்’ என்ற அமிலம் உள்ளது.