பேசும் சப்தத்தை விட குறட்டை சப்தம் அதிகமா இருக்கா? ஆபத்து! டாக்டர் வார்னிங்
சென்னை:
பேசும் சப்தத்தை விட குறட்டை சப்தம் அதிகமாக இருக்கிறதா, குறட்டை சாதாரணமாக விட்டுவிடலாமா இல்லை ஆபத்தா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: “
உறக்கத்தின் போது மூக்கின் வழியாக வாய் வழியாக வெளியேறும் காற்று – நார்மலான மனிதர்களுக்கு பெரிய சத்தமின்றி வரும். எனினும் குறட்டையின் சத்தம் அதிகமாவது உடலுக்கு நல்லதல்ல.
எனவே குறட்டை குறித்த இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.
1.தாங்கள் விடும் குறட்டை தங்களின் பேசும் ஒலியை விட அதிகமாக இருக்கிறதா?
ஆம் / இல்லை
2.பகல் நேரத்தில் எப்போதும் ஒருவித சோர்வு / மந்தம் – பகல் நேரத்தில் தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதா?
ஆம்/இல்லை
3.தாங்கள் உறங்கும் போது
யாரேனும் உங்களது குறட்டையும் மூச்சு விடுதலும் அவ்வப்போது நிற்பதை கண்டிருக்கிறார்களா?
ஆம்/இல்லை
4.ரத்த கொதிப்பு (அதிக ரத்த அழுத்தம்) நோய் இருக்கிறதா?
ஆம்/ இல்லை
5.தங்களது வயது 50க்கு மேலா?
ஆம்/இல்லை
6.தங்களது கழுத்து சுற்றளவு
40 செண்ட்டிமீட்டருக்கு மேல் உள்ளதா?
ஆம்/இல்லை
இந்த நோய்க்கு சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுபவை
– உடல் எடையை குறைத்தல் – நோய் நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்
– மது , புகைப்பழக்கம் போன்றவற்றை கைவிடுதல் நல்ல முன்னேற்றத்தை தரும்.