Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

கண்திருஷ்டியால் ஒரே கஷ்டமா... இந்த ஒரு பொருளை வீட்டு தலைவாசலில் மாட்டுங்கள்...துன்பம் தூர போகும்

கண்திருஷ்டியால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு வாசலில் இதை கட்டி தொங்க விடுங்கள் துன்பங்கள் தூர ஓடிவிடும்.

ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும். நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அது எளிமையான பரிகாரம்தான். உங்கள் வீட்டு வாசலில் இந்த ஒரு பொருளை கட்டி தொங்க விட்டால் போதும் கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போய் விடும்.கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும்.
ஏன் இப்படி என்று யோசித்தாலோ அல்லது கோவிலுக்கு சென்று பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலோ கண் திருஷ்டியின் தாக்குதல் அதிகம் பாதித்து இருப்பதாக சொல்லி அதற்கேற்ப பரிகாரமும் சொல்வார்கள். கண் திருஷ்டி போக சில பரிகாரங்களையும் சொல்வார்கள். எளிதான அந்த பரிகாரத்தை ஞாயிற்றுகிழமைகளில் செய்ய வேண்டும்.

திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்

பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் சுற்றிப்போடுவார்கள். வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். இது பொதுவாக திருஷ்டி கழிக்கும் முறையாகும். கல் உப்பு, வர மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், திருமணம் முடிந்து வீடு திரும்பும் மணமக்கள், பிரசவம் முடிந்து வரும் தாய்,சேய் என பலருக்கும் திருஷ்டி கழிப்பார்கள். கடை, தொழிற்கூடங்களின் வாசலிலும் கூட கற்பூரம் ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பார்கள் சிலர் சிதறு தேங்காய் உடைப்பார்கள்.
அமாவாசை நாளிலோ, வெள்ளிக்கிழமையன்றோ ஒருமுறை திருஷ்டி கழித்து வந்தால் தோஷங்கள் நீங்கி நமக்கு அதனால் வர கூடிய பாதிப்புகள் கட்டுப்படும் என்பது நம்முடைய நம்பிக்கையாகும். சிலர் எங்காவது வெளியே போய் விட்டு வந்தாலே உடல் சோர்வு, தலைவலி என அவஸ்தைப்படுவார்கள், அதற்குக் காரணம் கண் திருஷ்டிதான்.