Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

உங்கள் குல தெய்வத்தை இப்படி கும்பிடுங்கள்... துன்பம் தொலைந்தது இப்போ என்று பாடுவீர்கள்

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள்.

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கவலையில் இருக்கிறீர்களா? உங்கள் குல தெய்வத்தை மனம் உருகி கும்பிடுங்கள். துன்பம் தொலைந்து இப்போ என்று மகிழ்ச்சியோடு பாடுவீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களின் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கத் தொடங்கும்.
சிலர் தின கூலிக்கு வேலை செய்வார்கள்… சிலரோ வார சம்பளம் வாங்கி காலம் கடத்துவார்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத சம்பளம் வாங்குவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் சிலர் கையில் பைசா தங்காது. சம்பாதிக்கும் பணம் மொத்தமும் கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கும். இதற்குக் காரணம் கஷ்டம் அவர்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும்.
உங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் காவல் தெய்வம் ஒன்று உண்டு என்றால் அது குல தெய்வம் மட்டுமே. குல தெய்வத்தை மறக்காதவர்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். மாசிமகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் நாட்களில் மட்டுமே குல தெய்வத்தை கும்பிடவேண்டும் என்பதில்லை. வாரம் ஒருமுறை உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள்.

தாமரைப்பூ அர்ச்சனை

உங்களுடைய குல தெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வாரம் 1 முறை தாமரை பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். ரொம்பவும் வறுமையில் இருப்பவர்கள் மாதம் 1 தாமரைப்பூவை மட்டுமாவது உங்களுடைய குல தெய்வத்திற்கு வாங்கிக் கொடுத்து அந்தத் தாமரை பூவினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள், 21, 51 என்ற எண்ணிக்கையில் குலதெய்வ கோவிலுக்கு தாமரைப் பூவை வாங்கி கொடுப்பது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும்.
குலம் செழிக்க குங்கும அர்ச்சனை குலதெய்வத்திற்கு செய்துவர வேண்டும். உங்கள் குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் குங்குமத்தை வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக தரலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மேலே சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றி வாருங்கள்.