Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?

வண்டியூர் மலைக் கிராம மக்கள்

சிராஜ்
பதவி, தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
19 ஜூலை 2026

எனக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு பட்டா கிடையாது. ஆனால், நான் பிறந்தது இங்கு தான். இந்த வயதில் ஊரைக் காலி செய்யுங்கள் என்றால் நான் எங்கே செல்ல முடியும். உயிரே போனாலும், இங்கிருந்து போக முடியாது,” எனக் கூறுகிறார் வண்டியூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம்.

தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு–மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருவதாகக் கூறுகின்றனர். இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

இப்பகுதி 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது.இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூா், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமாா் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 29, 2026 அன்று அளித்த உத்தரவு தான் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் கவலைக்கு காரணம்.

“தேனி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனால், “இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?” என கேள்வி எழுப்புகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன்.

தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “ஆக்கிரமிப்பாளர்களில் பலர் நிலமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆவர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

“மேகமலை என்றதும் அதை சுற்றுலா தலம் அல்லது தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் பல்வேறு கிராமங்கள் உள்ளன. அவை சுற்றுலா தலங்கள் அல்ல, தமிழ்நாட்டின் சராசரி கிராமங்கள் தான். அங்கு பல்லாயிரம் மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கிறார்கள்” என்கிறார் கண்ணன்.